நயன வாசலதிலக நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக நயன வாசலதிலக இன்று (12) நாடாளுமன்றில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் கூடியது போது நாடாளுமன்ற உறுப்பினராக நயன வாசலதிலக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நேற்று முன்தினம் சமிந்த விஜேசிறி விலகியிருந்தார்.

இதனை அடுத்து ஏற்பட்ட நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு நயன வாசலதிலகவை நியமனம் செய்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles