கந்தகாடு புனர்வாழ்வு நிலைய நிர்வாகத்தை மாற்றுவது குறித்து பரிசீலனை – நீதி அமைச்சர்

Colombo (News 1st) எதிர்காலத்தில் கந்தகாடு புனர்வாழ்வு நிலைய நிர்வாகத்தை மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த மாற்றத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்பிரகாரம், கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் குறித்த விரிவான அறிக்கை கிடைத்ததும் அது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் 24 கைதிகள் காயமடைந்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles