Friday, February 6, 2026
Homeமன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணித்த பஸ் சைக்கிளுடன் மோதி விபத்து; ஒருவர் பலி

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணித்த பஸ் சைக்கிளுடன் மோதி விபத்து; ஒருவர் பலி

Colombo (News 1st) மன்னார் – யாழ். வீதியின் பள்ளமடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியாருக்கு சொந்தமான பஸ், அதே திசையில் பயணித்த சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சைக்கிளில் இருவர் பயணித்துள்ளதுடன், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த மற்றவர் கோவில்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கோவில்குளம் – சவரிக்குளம் பகுதியை சேர்ந்த 40 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular