கணக்காய்வாளர் திணைக்களத்தில் பதவி வெற்றிடம்

Colombo (News 1st) கணக்காய்வு அதிகாரிகளுக்கான சுமார் 400 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக கணக்காய்வு நடவடிக்கைகளை அதிகபட்ச முகாமைத்துவத்துடன் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக, கணக்காய்வாளர் நாயகம் W.P.C.விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார். 

கணக்காய்வு அதிகாரி பதவிக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார். 

அதற்கமைய, உரிய தகுதிகளுடன் தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். 

இதற்கான வர்த்தமானி விரைவில் வௌியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles