Wednesday, February 4, 2026
Homeபெலியத்தயில் ஐவர் சுட்டுக்கொலை: பத்தேகமயில் சந்தேகநபர் கைது

பெலியத்தயில் ஐவர் சுட்டுக்கொலை: பத்தேகமயில் சந்தேகநபர் கைது

Colombo (News 1st) பெலியத்தயில் ஐவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் மாத்தறை – அக்குரஸ்ஸ, பத்தேகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹக்மன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழுவினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலைச் சம்பவத்தை இந்நபர் வழிநடத்தியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

பேலியகொட மெனிங் சந்தையின் வர்த்தகர் ஒருவரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டை மேற்கொள்வதற்காக சந்தேகநபர்கள் வருகை தந்த ஜீப்பும் காலியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (23) கைப்பற்றப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular