ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்

Colombo (News 1st) மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மன்னார் தீவில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியின் கீழ் 47 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

06 காற்றாலை இயந்திரங்களை நிர்மாணிப்பதன் மூலம் மின்னுற்பத்தியை அதிகரிப்பதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம்  வழங்கப்பட்டது.

எனினும், அரசின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வரை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியைப் பயன்படுத்துவதற்கு இயலாமற்போனது.

போட்டி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறையின் முதலீட்டாளர்கள் மூலம் குறித்த செயற்றிட்டத்தை  நடைமுறைப்படுத்துவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles