Saturday, February 7, 2026
Home76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 600 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 600 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

Colombo (News 1st) 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

சுமார் 600 பேருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடுமையான குற்றங்களை புரிந்தோர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட மாட்டார்களென அவர் கூறினார்.

ஒழுக்கத்துடன் நடந்துகொண்ட மற்றும் அபராதத் தொகையை செலுத்த முடியாத கைதிகளுக்கே ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்தார்.

இதனிடையே, நாளை (04) நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவையொட்டி உறவினர்களை பார்வையிட சிறைக்கைதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கைதி ஒருவரை பார்ப்பதற்கு குடும்பத்தில் மூவருக்கு மாத்திரம் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular