அந்த இடத்தை நீங்க தான் பிடிக்கணும்.. : பிரைட் நடிகருடன் மீண்டும் ரிட்டர்ன் ஆகும் மனைவி..!

    0
    41

    இங்குள்ள பெரும் போட்டி காரணமாக இந்த ஏரியாவே செட் ஆகாது என கணவரை இன்னொரு ஸ்டேட்டில் பெரிய ஹீரோவாக மாற்ற அழைத்துச் சென்ற மனைவி தற்போது மீண்டும் இதே ஊருக்கு பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு கிளம்ப ரெடியாகி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    விருது இயக்குநருடன் பிரைட் நடிகர் நடிக்க வேண்டிய படம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும் நிலையில், அடுத்தடுத்து வேறு வேறு படங்களில் தனது கணவருக்கு வாய்ப்புகளை பெற்றுத் தந்துக் கொண்டிருந்த மனைவி நடிகை தற்போது அந்த படத்தை முதலில் ஆரம்பித்து விடுங்கள் என்றும் இதுதான் சரியான சமயம் என கணவரை உசுப்பி விட்டு இருப்பதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

    பல இடங்கள் தள்ளி: முதல் இரண்டு இடத்தில் அந்த மாஸ் ஹீரோவும் டாப் ஹீரோவும் இருந்து வந்த நிலையில், மூன்றாவது இடத்தில் கெத்தாக சுற்றிக் கொண்டிருந்தார் பிரைட் நடிகர். ஆனால், மூத்த நடிகர்களே தற்போது பெரும் போட்டியாக அமைந்து விட்ட நிலையில், சில இளம் ஹீரோக்களும் பிரைட் நடிகரை விட பாக்ஸ் ஆபிஸ் மாஸ் காட்ட ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், நடிகரின் இடம் பல இடங்கள் தள்ளி கீழே சரசரவெனெ இறங்கி விட்டது.

    இடமாற்றம்: தனக்கும் தனது கணவருக்கும் இங்கே இனிமேல் செட்டாகாது என நினைத்த மனைவி உடனடியாக வேறு காரணங்களை சொல்லி விட்டு பெரிய குடும்பத்தில் இருந்து கணவரை கொத்தாக கழட்டிக் கொண்டு கிளம்பி விட்டார். தனக்கு நல்லது நடக்குதுன்னே நினைத்த நடிகரும் மனைவியின் சொல் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவர் கூடவே கிளம்பி சென்று விட்டாராம்.

    நடிகரின் இடம் காலி: மாஸ் நடிகரின் அதிரடி முடிவு காரணமாக இன்னும் ஒரு வருடத்தில் அவருடைய இடம் மொத்தமாக காலியாகி விடும் என்பதை தெரிந்துக் கொண்ட நடிகை அந்த இடத்துக்கு பல இளம் நடிகர்கள் குறி வைத்துக் காத்திருப்பதை அறிந்து, அந்த இடத்தை வேறு யாருக்கும் விட்டு விடக் கூடாது என மீண்டும் கணவரை இங்கேயே அழைத்து வர முடிவு செய்து விட்டதாக கூறுகின்றனர்.

    விரைவில் அந்த படம்: மேலும், விருது இயக்குநருடன் ஏற்கனவே கமிட்டான படம் பல ஆண்டுகளாக தள்ளிப் போய்க் கொண்டிருக்கும் நிலையில், இதுதான் சரியான நேரம் அந்த இயக்குநரை நீங்க முதலில் லாக் செய்து இந்த படத்தை ஆரம்பித்து விடுங்க என பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்திருக்கிறாராம். விரைவில் அந்த படம் தொடங்கி விடும் என்றும் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here