ஆமிர் கானின் தங்கல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஹானி பட்நாகர் காலமானார்

Colombo (News 1st) ஆமிர் கானின் (Aamir Khan) ‘தங்கல்’ (Dangal) படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஹானி பட்நாகர் (Suhani Bhatnagar) உடல்நலக்குறைவால் தனது 19 ஆவது வயதில் இன்று (17) காலமானார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆமிர் கான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘தங்கல்’.

பெரும் வெற்றியைப் பெற்ற இப்படத்தில் ஆமிர் கானின் மகளாக பபிதா போகட் (Babita Phogat)  என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் சுஹானி பட்நாகர்.

இந்த படத்திற்கு பிறகு, அவர் நடிப்பிலிருந்து விலகி படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

ஹரியானாவின் ஃபரிதாபாத்தை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் (dermatomyositis) பாதிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக ஆமிர் கானின் தயாரிப்பு நிறுவனம் X தள பக்கத்தில் இரங்கல் வௌியிட்டுள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles