விஜய்-யின் அரசியல் பிரவேகம் : மீண்டும் வெளியாகும் கில்லி..!

நடிகர் விஜய்-திரிஷா நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ‘கில்லி’.

இந்த படத்தை தரணி இயக்கியிருந்தார். வித்யாசாகர் இசை அமைப்பில் படத்தின் அனைத்து பாடல்களும் மாஸ் ‘ஹிட்’. இந்த படத்தில் பிரகாஷ்ராஜின் வில்லன் கேரக்டர் ரசிகர்களிடம் பெரிதும் பேசப்பட்டது. இப்படம் 2001-ல் வெளியான பிரெண்ட்ஸ் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

நடிகர் விஜய்-யின் சினிமா கேரியர்களில் சிறந்ததாக இன்றளவும் பேசப்படும் படமாக கில்லி உள்ளது. இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் விஜய் அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து மீண்டும் அந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது.

‘கில்லி’ படம் வருகிற ஏப்ரல் 27- ஆம் திகதி மீண்டும் ‘ரீ ரிலீஸ்’ (மறு வெளியீடு) செய்யப்படும் என தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கோடை விடுமுறையில் ‘கில்லி’ வெளியாவது விஜய் ரசிகர்களையும், பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles