உத்தேச மின் கட்டண திருத்த யோசனை தொடர்பான இறுதி தீர்மானம் இன்று(28)

Colombo (News 1st) இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று(28) கூடவுள்ளது. 

இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள உத்தேச மின் கட்டணத் திருத்த யோசனை தொடர்பில் இன்றைய கூட்டத்தின் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் மற்றும் கருத்துகள் இதன்போது கவனத்தில் கொள்ளப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே, தற்போது காணப்படும் மின் கட்டணத்தை குறைந்தபட்சம் 20 வீதத்திற்கு மேல் குறைக்க வேண்டும் என பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிப்பதற்கான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரைத்திருந்தது.

கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தை அதே வீதத்தில் குறைப்பதற்கு இலங்கை மின்சார சபை யோசனை முன்வைத்துள்ளதாக மின்சக்தி – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்திருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles