பஸ் விபத்தில் 36 பேர் காயம்

Colombo (News 1st) மொனராகலை – கொடயான பகுதியில் இலங்கை போக்குவரதது சபைக்கு சொந்தமான பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 36 பேர் காயமடைந்துள்ளனர்.

புத்தமவில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சியாம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 24 பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இதேவேளை, தெஹிவளை மேம்பாலத்திற்கு அருகில் இன்று(29) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு தனியார் பஸ்கள் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் கல்கிசை பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியொருவர் உயிரிழந்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles