Tuesday, February 10, 2026
Homeரூ. 500 கோடி மரகத நெக்லெஸ், ரூ. 53 கோடி வைர மோதிரம் அணிந்து அனைவரையும்...

ரூ. 500 கோடி மரகத நெக்லெஸ், ரூ. 53 கோடி வைர மோதிரம் அணிந்து அனைவரையும் சொக்க வைத்த நீதா அம்பானி..!

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த், ராதிகா மெர்சென்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் முடிந்துவிட்டாலும் பலரும் இன்னும் அது பற்றியே பேசி வருகிறார்கள்.

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மூன்று நாட்கள் நடந்த கொண்டாட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். அந்த மூன்று நாட்களுக்கு ரூ. 1, 259 கோடி செலவு செய்திருக்கிறார் முகேஷ் அம்பானி என கூறப்படுகிறது.

அமெரிக்காவில் இருந்து வந்த பில் கேட்ஸும், மார்க் ஜக்கர்பர்க்கும் ஷெர்வானி அணிந்ததை பார்த்தவர்கள் அசந்து போனார்கள். ஆனந்த் நிகழ்ச்சியில் பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் அம்மா நீதா அம்பானி தான். எந்த விசேஷமாக இருந்தாலும் அசத்தலாக உடை அணிந்து, அழகு அழகான நகைகள் அணிந்து வருவார் நீதா அம்பானி.

அப்படி இருக்கும்போது தன் மகனுக்காக நடத்தப்படும் விசேஷத்திற்கு கூடுதல் ஸ்பெஷலாக வந்திருந்தார் நீதா. மூன்று நாட்களில் கடைசி நாள் நீதா அணிந்திருந்த நகைகளின் மதிப்பு குறித்து அறிந்தவர்களுக்கு ஒரு நிமிஷயம் தலையே சுத்திருச்சு.

கொண்டாட்டத்தின் கடைசி நாளன்று அழகான சேலை அணிந்து மரகத கற்களால் ஆன நெக்லஸ் அணிந்திருந்தார் நீதா அம்பானி. அந்த நெக்லஸின் விலை ரூ. 500 கோடி ஆகும். மேலும் அவர் கையில் அணிந்திருந்த வைர மோதிரத்தின் விலை ரூ. 53 கோடி மட்டுமே. 52.58 காரட் வைரம் என்பதால் அந்த விலை. அந்த வைரத்தின் பெயர் மிரர் ஆஃப் பாரடைஸ்(Mirror of Paradise).

முன்னதாக மும்பையில் நடந்த நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மைய துவக்க விழாவிலும் இதே வைர மோதிரத்தை அணிந்திருந்தார் நீதா என்பது குறிப்பிடத்தக்து.

RELATED ARTICLES

Most Popular