நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதி..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அஜித் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது.

விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக அடுத்த வாரம் வெளிநாடு செல்ல இருக்கின்றார் அஜித். எனவே தான் நார்மல் செக்கப் செய்துகொள்வதற்காக அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை வீடு திரும்புவார் என தகவல் கிடைத்துள்ளது.

துணிவு படத்திற்கு பிறகு அஜித் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். பல இழுபறிக்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் துவங்கியது. தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பில் பல தடைகள் ஏற்பட்டுள்ளது. முதலில் விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் காலமானார்.

இந்த சோகத்தில் இருந்து படக்குழு இயல்பு நிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆனது. அதன் பிறகு படப்பிடிப்பை துவங்கி தொடர்ந்து நடத்தி வந்தனர். அந்த சமயத்தில் அஜர்பைஜானில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து படக்குழு சென்னைக்கு திரும்பிய நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் இருப்பதால் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்திவைத்துள்ளதாகவும் தகவல்கள் வந்தன. இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles