டுபாயில் வைரலாகும் 24 கரட் தங்கத்தாலான பருப்பு கறி..!

டுபாயிலுள்ள ஒரு உணவகத்தில் தயாராகும் சிறப்பு பருப்பு கறி குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புகழ்பெற்ற சமையல் கலை நிபுணரான ரன்வீர் பிரார் வித்தியாசமான உணவுகளை தயார் செய்வதில் பெயர் பெற்றவர். இவர் டுபாயில் நடத்தி வரும் உணவகத்தில் சிறப்பு உணவாக ‘தால் கஷ்கான்’ என்ற பெயரில் விசேஷமாக பருப்பு குழம்பை தயாரித்து வழங்குகிறார்.

இந்த பருப்பு குழம்பு ஒரு மரப்பெட்டியில் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த பருப்பு கரைசலில் 24 கரட் தங்கம் கலக்கப்படுவது தான். இதனை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள்

கண் முன்பே தங்க பவுடர் கலந்த கரைசல் பருப்புடன் சேர்த்து நெய் கலந்து பரிமாறப்படுகிறது.

இந்த சிறப்பு உணவின் விலை இலங்கை மதிப்பில் 4,830 ரூபாவாகும். டுபாயிலுள்ள பிரபல சிட்டி மாலில் இந்த சிறப்பு உணவு பரிமாறப்படுகிறது. இதுகுறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி 84 இலட்சம் பார்வைகளை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles