மெக்சிகோவில் ஹெலிகொப்டர் விபத்து : 3 இராணுவ வீரர்கள் பலி..!

மெக்சிகோ கடற்படை வீரர்கள் நேற்று, ஹெலிகொப்டரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மெக்சிகோ வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பலில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த ஹெலிகொப்டர் சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து கப்பலில் இருந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஹெலிகொப்டரில் பயணித்த பேரில், 3 வீரர்கள் உயிரிழந்தனர். 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 2 பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக மெக்சிகோ கடற்படை தெரிவித்துள்ளது.

விபத்து குறித்த விசாரணை நடத்தப்படுவதாகவும் கடற்படை கூறியுள்ளது.ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு .இராணுவம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles