நீரில் மூழ்கி ஒரு குழந்தை உட்பட மேலும் இருவர் பலி..!

இரண்டு பிரதேசங்களில் நீரில் மூழ்கி ஒரு குழந்தை உட்பட மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். சந்திவேல் சித்தாண்டி பகுதியில் சந்தனமடு ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சித்தாண்டி 2 பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 33 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று (08) சில நண்பர்களுடன் குளிக்கச் சென்ற நிலையிலேயே, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரில் மூழ்கியவர்கள் பிரதேசவாசிகளால் மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று இரவு உயிலங்குளம் திருக்கதீஸ்வரம் பாலாவி ஏரியில் மூழ்கி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 9 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

உயிலங்குளம் திருக்கேஸ்வரம் கோவிலில் இடம்பெற்ற திருவிழாவைக் காண மக்கள் குழுவுடன் நீராடச் சென்ற குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உயிலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles