நைஜீரியாவில் 287 மாணவர்கள் கடத்தல்..!

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து 287 மாணவர்களை ஆயுதமேந்திய குழு ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடத்தப்பட்ட மாணவர்கள் 8 முதல் 15 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை ஆரம்பிக்கும் முன் விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் கூடியிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் இந்த கடத்தலை மேற்கொண்டதாக ஆசிரியர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கடத்தலின் போது துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

அவ்வேளையில் மாணவர்களுடன் இருந்த ஆசிரியர் ஓடிச்சென்று உயிரைக் காப்பாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles