Monday, February 9, 2026
Homeவெள்ளத்தில் மூழ்கிய டுபாய்..!

வெள்ளத்தில் மூழ்கிய டுபாய்..!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. துபாய் உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் மழை வெள்ளம் ஏற்படுவது மிகவும் அரிதான நிகழ்வு என்பதால் டுபாய் வெள்ளம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் எமிரேட்ஸின் பல மாநிலங்களில் பெய்த கனமழையினால் வெள்ளம் சூழ்ந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், டுபாயில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை 6 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் டுபாயில் பல வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், ஏராளமான கார்களும் வெள்ளத்தில் சிக்கியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

RELATED ARTICLES

Most Popular