கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Colombo (News 1st) Sea Of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் வடக்கு கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் இந்திய மீனவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.காரைநகர் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் 03 படகுகளுடன் இந்திய மீனவர்கள் 22 பேரும் நேற்றிரவு(09) கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனையடுத்து குறித்த 22 இந்திய மீனவர்களும், கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளால் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles