பிள்ளைகளுக்கான புத்தகங்களை எடுக்க சென்ற மனைவியை கொன்ற கணவன்..!

அலபாத்த, நிரியெல்ல பிரதேசத்தை சேர்ந்த மனைவியை, கணவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இச்சம்பவத்தில் 40 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார் எனவும், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனித்தனி வீடுகளில் வசித்து வந்த நிலையில், உயிரிழந்த பெண் பிள்ளைகளுக்கான புத்தகங்களை எடுத்து வருவதற்காக கணவன் வீட்டுக்குச் நேற்று சென்ற போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

கணவன் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், 43 வயதான சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles