ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ‘பிரேமலு’ படம்..!

ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான மலையாள மொழிப்படம் ‘பிரேமலு’. காதல், காமெடி நிறைந்த இப்படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கியிருந்தார். இதில் மமிதா பைஜு, நஸ்லேன் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படம் கடந்த பிப்ரவரி 9- ஆம் திகதி வெளியானது. கேரளாவில் பெரும் வெற்றி பெற்ற இந்த படம் பிப்.15- ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 8 -மகளிர் தினத்தில் தெலுங்கில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் உலக அளவில் இந்த படம் ‘பாக்ஸ் ஆபீஸ்’ வசூல் செய்துள்ளது. பிரேமலு படத்தின் வசூல் தற்போது ரூ.100 கோடியைத் தாண்டியது. வருகிற 15 – ஆம் திகதி தமிழில் இப்படம் ‘டப்பிங்’ செய்தும் வெளியிடப்படுகிறது.

மலையாள மொழியில் வெளியான 5-வது சாதனை திரைப்படமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles