பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் பலி..!

கொழும்பு பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை அளுத்நுவர பிரதேசத்தில் அரச பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் இன்று (12) உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

பொடிமணிகே என்ற எழுபத்திரண்டு வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறையிலிருந்து மஹியங்கனை நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.ச பஸ்ஸின் படிக்கட்டிலிருந்து விழுந்து பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொடை மாமல்கஹா பிரதேசத்தில் உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு பொலன்னறுவைக்கு திரும்புவதற்காக பாணந்துறை பஸ்ஸில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles