எங்க அம்மாவால மட்டும்தான் இப்படி பேச முடியும் : வைரலாகும் அஸ்வின் எக்ஸ் பதிவு..!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிசந்திரன் அஸ்வின் சமீபத்தில் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 5-வது போட்டி இந்திய வீரர் அஸ்வினுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாக அமைந்தது.

இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ரவிசந்திரன் அஸ்வின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியின் இரு இன்னிங்ஸ்-இலும் 25.4 ஓவர்கள் பந்துவீசிய அஸ்வின் 128 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியில் களமிறங்கிய அஸ்வின் 128 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியை போன்றே தனது 100-வது டெஸ்ட் போட்டியிலும் அஸ்வின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி 128 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அஸ்வின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இத்தனை ஆண்டுகள் விளையாடியும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனது தாயார் மட்டுமே இதுபோன்ற விஷயங்களை கூற முடியும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles