துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு.? : ஆண்டவரின் ‘தக் லைஃப்’ படத்தில் அதிரடி மாற்றம்…!

கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படம் உருவாகி வருகிறது. இதன் ஷுட்டிங் அண்மையில் செர்பியாவில் துவங்கியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ‘தக் லைஃப்’ படத்தில் நடிப்பதாக கூறப்பட்ட துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் துல்கர் சல்மானுக்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்க வைக்கும் முயற்சியில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

கோலிவுட் சினிமாவின் பிரம்மாண்ட படைப்பாக ‘தக் லைஃப்’ படம் உருவாகி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு கமல், மணிரத்னம் காம்போ இப்படத்தில் இணைந்துள்ளது. அண்மையில் இதன் ஷுட்டிங் செர்பியாவில் துவங்கியது.

இந்நிலையில் ‘தக் லைஃப்’ படத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு மாற்றம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற வைத்துள்ளது.

‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு பின்பாக கமலின் மார்கெட் வேல்யூ எகிற விட்டது. தனது தீவிர ரசிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான இப்படம் கோலிவுட் சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு வசூலை வாரி குவித்தது.

இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனையடுத்து மணிரத்னமுடன் கூட்டணி அமைத்துள்ளார் கமல். தமிழ் சினிமாவின் இருபெரும் ஜாம்பவான்களான இவர்கள் இருவரும் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.

திரிஷா, ஜெயம் ரவி, ஜோஜு ஜார்ஜ், கெளதம் கார்த்திக், அபிராமி, ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர். கமல் தற்போது மக்களவை தேர்தலில் பிசியாக இருப்பதால் அவர் இல்லாத காட்சியை மணிரத்னம் படமாக்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தக் லைஃபில் நடிக்கவிருந்த துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக படத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை நடிக்க வைக்கும் பணிகளில் படக்குழு இறங்கியுள்ளனர்.

அந்த வகையில் துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்புவை ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க வைக்க படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட அவர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிம்பு அடுத்ததாக உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘எஸ்டிஆர் 48’ படத்தில் நடிக்கவுள்ளார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியாகி இருந்தாலும், இன்னமும் படப்பிடிப்பு துவங்கப்படாமல் இருக்கிறது.

தொடர்ந்து இப்படத்தின் ஷுட்டிங் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. இதனிடையில் கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles