Tuesday, February 10, 2026
HomeFacebook, Instagram, Messenger மற்றும் Threads ஆகிய சமூக வலைத்தளங்கள் உலகளாவிய ரீதியில் செயலிழப்பு

Facebook, Instagram, Messenger மற்றும் Threads ஆகிய சமூக வலைத்தளங்கள் உலகளாவிய ரீதியில் செயலிழப்பு

Colombo (News 1st) Facebook, Instagram, Messenger மற்றும் Threads ஆகிய சமூக வலைத்தளங்களின் சேவைகள் உலகளாவிய ரீதியில் சடுதியாக முடங்கின.

Facebook செயலிழந்தமை தொடர்பில் 3 இலட்சத்திற்கும் அதிகமான முறைப்பாடுகளும்  Instagram செயலிழந்தமை தொடர்பில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சமூக வலைத்தளங்கள் சடுதியாக செயலிழந்தமை தொடர்பில் தாய் நிறுவனமான Meta-விடம் வினவுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என Reuters செய்திச்சேவை தெரிவித்திருந்தது.

கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கும் மேலாக செயலிழந்திருந்த சமூக வலைத்தளங்கள் சற்று நேரத்திற்கு முன்னர் வழமைக்குத் திரும்பின.

RELATED ARTICLES

Most Popular