டெங்கு காய்ச்சலால் 2 மாதங்களில் 7 பேர் உயிரிழப்பு; கொழும்பில் அதிகளவான நோயாளர்கள் பதிவு

Colombo (News 1st) கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் 18,556 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் கடந்த 15 நாட்களில் மாத்திரம் 2,132 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்கு அதி அபாய வலயங்களாக 10 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles