யுக்திய சுற்றிவளைப்பு: 24 மணித்தியாலங்களில் 1067 பேர் கைது

Colombo (News 1st) இன்று (16) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பில் மேலும் 1067 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் போதைப்பொருட்கள் தொடர்பில் 984 பேர் கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் விசேட செயலணியின் ஆவணங்களில் பெயரிடப்பட்டுள்ள 50 சந்தேகநபர்களும் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், குற்றப்பிரிவின் பட்டியலில் உள்ள 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சுற்றிவளைப்புகளில் ஹெரோயின், ஐஸ், கஞ்சா மற்றும் மாவா உள்ளிட்ட போதைப்பொருட்கள்  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles