வீட்டு வாடகை கூட கட்ட முடியவில்லை : பாலிவுட் இயக்குனர் வேதனை..!

தேவாஷிஷ் மகிஜா இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு மனோஜ் பாஜ்பாய், தன்னிஷ்தா சாட்டர்ஜி போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியான படம் ஜோரம்.

தேவாஷிஷ் மகிஜாவுடன் மனோஜ் வாஜ்பாய் மூன்றாவது முறையாக பணியாற்றுகிறார். 69 ஆம் பிலிம் ஃபேர் விருது வழங்கும் விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த கதை என 3 பிரிவில் ஜோரம் படம் பரிந்துரைக்கப்பட்டது. அதில் சிறந்த படம் மற்றும் சிறந்த கதைக்கான விருதுகளை வென்றது.

ஒரு அவநம்பிக்கையான தந்தை, அவர் இறந்துவிட விரும்பும் அமைப்பிலிருந்து தப்பிக்க தனது கைக்குழந்தையுடன் ஓடுகிறார் என்ற கதைகளத்தின் அமைந்த கதை . பல விமர்சகர்களால் ஜோரம் படம் பாராட்டை பெற்றது. இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான தேவாஷிஷ் மகிஜா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில்..,

” நான் இயக்கிய எனது படங்களின் மூலம் எனக்கு பணம் கிடைத்ததில்லை. கடந்த 5 மாதங்களாக என் வீடு வாடகையை செலுத்த முடியாத நிலையில் நிற்கிறேன். காரணம் நான் இயக்கி தயாரித்த ‘ஜோரம்’ படம் எந்த லாபத்தையும் கொடுக்கவில்லை. அதனால் இப்போது நான் கடனாளியாக நிற்கிறேன்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles