Tuesday, February 3, 2026
Home14 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் விஜய் : 'தி கோட்' படப்பிடிப்பு..!

14 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் விஜய் : ‘தி கோட்’ படப்பிடிப்பு..!

லியோ வெற்றியை அடுத்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். முதுமை தோற்றத்திலும், இளமைத் தோற்றத்திலும் என இரு வேடங்களில் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். விஜய் இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் என்ற தகவல் பரவியது.

பிரஷாந்த், பிரபு தேவா, மீனாட்சி சவுத்ரி, லைலா என நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர். படக்குழுவினர் தாய்லாந்து, சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தினர்.

இந்நிலையில் அடுத்ததாக படக்குழுவினர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் படப்பிடிப்புகாக கேரளா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular