Crew படத்தின் டிரெயிலர் வெளியீடு..!

கரீனா கபூர் , தபு, கிருதி சானோன் முன்னிலை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் க்ரீவ். இவர்கள் மூவரும் கோஹினூர் விமான நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டஸாக பணிப்புரிகிறார்கள். மூன்று கதாநாயகிகளுக்கும் அவர்களின் வாழ்க்கையில் ஒரு பண நெருக்கடி வருகிறது.

வாழ்கையில் அடுத்து பணத்துக்காக என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க, அவர்கள் வேலை செய்யும் விமானத்தில் தங்க கட்டிகளுடன் ஒரு பயணி இறந்துக் கிடக்கிறார். அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்க கட்டிகளை எடுத்துக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டுகிறார்கள்.

தங்க கட்டிகளை மூவரும் சேர்ந்து கடத்தினார்களா? இல்லையா? அதில் என்ன சிக்கல் ஏற்பட்டது என்பதே கதை. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

டிரெயிலர் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. கதைக்களம் மிகவும் வித்தியாசமாக தேர்வு செய்து இருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் ஏ கிருஷ்ணன். இவர் இதற்கு முன் 2023-ஆம் ஆண்டு வெளிவந்த ‘லூட் கேஸ்’ படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. பாலாஜி டெலி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

மார்ச் 29-ஆம் திகதி வெளியாகவுள்ள இப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles