Saturday, February 7, 2026
Homeஅமரர் இராசநாயகி இரத்தினம்

அமரர் இராசநாயகி இரத்தினம்

பிறப்பு27 FEB 1939, இறப்பு30 MAR 2023
வயது 84
உடுவில், Sri Lanka (பிறந்த இடம்) La Courneuve, France

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், உடுவில், பிரான்ஸ் La Courneuve ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் இராசநாயகி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:18/03/2024.

அம்மா என்ற சொல்லின் சூட்சுமம் நீங்கள்
குடும்பத் தலைவியாய் எங்கள் வழிகாட்டியாய்
நீங்கள் இருந்தாய் அம்மா!

நாங்கள் எங்கே எப்படி வாழ்ந்தாலும்- நீயே
எங்கள் வாழ்வின் ஒளி விளக்கு!

பாசத்தின் உறைவிடம் அம்மா நீ நல்ல நேசத்தின்
இருப்பிடமும் நீங்கள் கருணையின் பிறப்பிடம் நீங்கள்

எம்மை அன்பாய் ஆட்சி செய்தவள் நீங்கள்
ஓராண்டு ஓடி ஒழிந்தது அம்மா
நித்தமும் உம் நினைவுகள் எம் மனதில் அம்மா

ஆறுதல் கூற ஆயிரம் வார்த்தைகள் இருந்தும் என்ன அம்மா
பரிவுடன் நீ காட்டிய அன்பினை இனி எவர்தான்
எமக்கு கொடுப்பார் அம்மா.

உம் ஆத்மா சாந்தியடைய எம்மை என்றும் வழிநடத்த
அனுதினமும் இறையருள் வேண்டுகின்றோம்..!

தகவல்: பிரபா (மகன்) குடும்பத்தினர்.
RELATED ARTICLES

Most Popular