அமரர் சுப்பிரமணியம் பிறைசூடி

பிறப்பு01 DEC 1960, இறப்பு20 MAR 2014
(முன்னாள் உதவி அரசாங்க அலுவலகர் துணுக்காய், கொழும்பு சாம்பவி கிரபிக்ஸ் உரிமையாளர்)
வயது 53
துணுக்காய், Sri Lanka (பிறந்த இடம்) கொடிகாமம், Sri Lanka கொழும்பு, Sri Lanka

முல்லைத்தீவு துணுக்காய் ஆலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கொடிக்காமம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் பிறைசூடி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம்மை விட்டு நீ பிரிந்து 10
ஆண்டு சென்றது மறைந்த
உன் நினைவு மட்டும் நெஞ்சில்
மாறாமல் உள்ளது சகோதரனே..!

ஆண்டவன் அழைத்திட்ட
பின்னாலே அழுகிறது இதயம்
வெறுமையாகவே கலைந்து
செல்லும் மேகமென காலங்கள் கடந்து
போகின்றனவே ஆனாலும் உன்
நினைவுகள் புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக்
கொண்டே இருக்கும் சகோதரனே..!

வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா? நூறாண்டு
போனாலும் உன் நிலவு முகம் தேயாதடா!
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும்
வரை வற்றிப் போகாது..!

உன் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம் !!

அன்புள்ள அப்பாவே!
எங்களை தவிக்க விட்டு விட்டு
எங்கே சென்றீர்கள் அப்பா

அன்பையும் பண்பையும்
காட்டி வளர்த்தீர்களே!
உங்கள் நினைவுகளை மட்டும்
விட்டு விட்டு சென்றுவிட்டீர்களே!

காலம் சென்றாலும்
உங்கள் நினைவுகள் அழியாது அப்பா!
என்றென்றும் எங்களின் இதயத்தில்
இருப்பீர்கள் அப்பா!

உங்களின் பாத அடி தொடர்ந்து செல்வோம்
உங்களின் நினைவுகளோடு வாழும் சகோதரி,
உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்..!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles