திருமதி லோகேஸ்வரன் புஸ்பராணி

பிறப்பு03 FEB 1964, இறப்பு18 FEB 2024
வயது 60
பலாலி தெற்கு, Sri Lanka (பிறந்த இடம்) புதுக்குடியிருப்பு, Sri Lanka

யாழ். பலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட லோகேஸ்வரன் புஸ்பராணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அம்மா முப்பத்தொன்று நாட்கள்
கரைந்ததம்மா உன்
அன்பு முகம் எம் இதயங்களை விட்டு
இன்னும் கரையவில்லையம்மா!

நீங்கள் எங்களை விட்டு
அகலவில்லையம்மாஎங்களோடுதான்
வாழ்கிறீர்கள் அம்மா!
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு என்றும்
பிரியாத தாய் நீயம்மா!

இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
கேட்கவில்லையாம்மா! ஆயிரம்
சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் உன்னை போன்று
அன்பு செய்ய யாரும் இல்லையம்மா
இவ் உலகில்…

 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்..!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம்,குடும்பத்தினர்

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles