Wednesday, February 4, 2026
Homeரஷ்யாவில் ஐ.எஸ் தாக்குதல் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு..!

ரஷ்யாவில் ஐ.எஸ் தாக்குதல் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு..!

ரஷ்யாவில் சிட்டி ஹால் அரங்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 115ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் கிராக்கஸ் சிட்டி ஹால் அரங்கில் நேற்றிரவு(22) நடைபெற்ற இசை நிகழ்ச்சி அரங்கத்துக்குள் நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த பார்வையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும் வெடிகுண்டுகளையும் வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது.

மேலும் இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 60 பேர் பலியானதுடன் சுமார் 145க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது வரை இந்த கொடூரத் தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 115ஆக உயர்ந்துள்ளது. மாஸ்கோ தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்(ஐ.எஸ்.ஐ.எல்) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 11 கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நிகழ்த்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் மோடி உள்பட உலகம் முழுவதும் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular