மதுரையில் கோலாகலமாக நடந்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜா திருமணம்..!

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கும், மாமா கார்த்திக்கிற்கும் இன்று மதுரையில் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் இந்திரஜா சங்கர்.

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பிகில் படம் மூலம் நடிகையானவர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. அந்த படத்தில் பாண்டியம்மாவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். அதன் பிறகு கார்த்தியின் விருமன் படத்தில் நடித்தார்.

அவருக்கும், மாமா கார்த்திக்கிற்கும் திருமணம் செய்து வைக்க பெரியவர் முடிவு செய்தார்கள். நிச்சயதார்த்தமே திருவிழா போன்று பிரமாண்டமாக நடந்தது. அடேங்கப்பா என ரசிகர்கள் வியந்தார்கள். இதையடுத்து இந்திரஜா, கார்த்திக்கின் திருமணம் இன்று நடந்தது.

மதுரையில் நடந்த திருமணத்தில் கோலிவுட் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மாமா கார்த்திக் தன் கழுத்தில் தாலி கட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் ஷேர் செய்து கொண்டிருக்கிறார் இந்திரஜா.

இந்திரஜாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூரி மணமகள் தன் மகள் போன்று என பேசி அங்கிருந்தவர்களை எமோஷனல் ஆக வைத்தார். மேலும் அவர் கொடுத்த மொய் கவரை பார்த்த ரோபோ சங்கரோ ரொம்ப வெயிட்டா இருக்கே என சொல்ல அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டார்கள்.

இந்திரஜா வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் இந்திரஜா தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என வாழ்த்தியுள்ளனர். மனதில் நின்ற காதலனே கணவனாக வரும்போது வாழ்க்கையே வரமாகும் என்கிறார்கள் ரசிகர்கள்.

முன்னதாக தன் மகளின் திருமணத்திற்கு உலக நாயகன் கமல் ஹாசன், பிரபு உள்ளிட்ட பல பிரபலங்களின் வீட்டுக்கு சென்று அழைப்பிதழ் கொடுத்தார் ரோபோ சங்கர். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் அழைப்பிதழ் கொடுத்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது.

இந்திரஜாவும், கார்த்திக்கும் இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே ரொம்ப பிரபலமான ஜோடி. இருவரும் சேர்ந்து அவ்வப்போது சூப்பராக டான்ஸ் ஆடி வீடியோ வெளியிடுவார்கள். மேலும் காமெடியாக பேசியும் வீடியோ வெளியிடுவார்கள். இனி கணவன், மனைவியாக ரீல்ஸ் வெளியிடப் போகிறார்கள்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles