மோடியின் வீட்டை முற்றுகையிட ஆம்ஆத்மி கட்சியினர் திட்டம் : பலத்த பாதுகாப்பு..!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டை முற்றுகையிட ஆம்ஆத்மி கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

இதனால் டில்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்துக்கு ஆம்ஆத்மி கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் எவ்வித போராட்டத்துக்கும் அனுமதி வழங்கவில்லை என டில்லி பொலிஸ் ஆணையர் தெரிவித்துள்ளார்.

டில்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles