வடமேல் மாகாணத்தில் ஒரு இலட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்பு..!

வடமேல் மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களில் ஒரு இலட்சம் பேர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன நேற்று (25) மாவத்தகம வௌடா றோயல் கல்லூரியில் தெரிவித்தார்.

தேசிய வேலைத்திட்ட நிகழ்வில் ஆளுநர் கலந்து கொண்டபோதே இதனைத் தெரிவித்தார்.

வடமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 68,000 மாணவிகளும் 48,000 மாணவர்களும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டும் பெற்றோருக்கு சமச்சீரான உணவை வழங்க இயலாமையே அவர்களின் போஷாக்கின்மைக்குக் காரணம் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

பணத்தைச் செலவழித்து சமச்சீரான உணவை அளிக்கும் திறமை உள்ள பெற்றோர்கள் கூட துரித உணவுகளை பெற்றுக்கொடுப்பதற்கு பழகியதால் இந்நிலைமை ஏற்றப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தாலும், சத்துணவு நிலை மேம்படும் என்பதால், மந்தபோஷணை நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றும் கூறினார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles