Sunday, February 8, 2026
Homeபோதையில் தள்ளாடிய ஆசிரியரை செருப்பால் தாக்கிய பள்ளி மாணவர்கள்..!

போதையில் தள்ளாடிய ஆசிரியரை செருப்பால் தாக்கிய பள்ளி மாணவர்கள்..!

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்ததாக புகார் எழுந்தது. இதனால் அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்து தூங்கியதாகவும், மாணவர்கள் ஏதாவது சந்தேகம் கேட்டால் அவர்களை திட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஆசிரியரின் இந்த நடத்தையால் மாணவர்கள் ஆவேசம் அடைந்தனர். சம்பவத்தன்று ஆசிரியர் வழக்கம் போல தகாத வார்த்தைகளால் மாணவர்களிடம் பேசி உள்ளார். இதனால் கோபம் அடைந்த மாணவர்கள் செருப்புகளை எடுத்து ஆசிரியரை தாக்க தொடங்கினர்.

உடனே அந்த ஆசிரியர் மோட்டார் சைக்கிளில் பள்ளியில் இருந்து தப்பி ஓட முயன்றார். அப்போதும் அவரை மாணவர்கள் துரத்தி சென்று அவர் மீது செருப்புகளை வீசி தாக்கி உள்ளனர்.

அடுத்தடுத்து செருப்பு பறந்து வந்ததால் ஆசிரியர் அங்கிருந்து பைக்கில் தப்பி ஓடினார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி 22 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. இதைத்தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular