கத்தரிக்கோலால் தாக்கி ஒருவர் கொலை..!

கத்தரிக்கோலால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் கிராண்ட்பாஸ் பகுதியில் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரே உயிரிழந்தார்.

கடந்த 26 ஆம் திகதி சந்தேக நபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து கத்தரிக்கோலால் தாக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் தாக்குதலில் பலத்த காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொலையுடன் தொடர்படைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles