கீதா கோவிந்தம் இயக்குனரின் அடுத்த படைப்பு..!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் விஜய்தேவரகொண்டா. ‘நுவ்விலா’ படத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டு சினிமா துறையில் விஜய் தேவரகொண்டா அறிமுகமானாலும் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘பெல்லி சூப்புலு’ படத்தின் மூலம் இவரை மக்கள் அங்கீகரிக்க ஆரம்பித்தார்கள்.

இப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அதற்கு அடுத்து 2017 ஆம் ஆண்டு விஜயதேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் வெளிவந்த அர்ஜூன் ரெட்டி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

அர்ஜூன் ரெட்டி புகழ் உலகமெங்கும் பரவியது. விஜய் தேவரகொண்டாவை ஒரு ரக்கட் பாய்-க்கு முன்னுதாரணமாக வைத்து இருந்தனர். அர்ஜூன் ரெட்டி படம் தமிழ் மற்றும் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்டது.

பின் அவர் அடுத்தடுத்து படங்களில் நடித்தார். கீதா கோவிந்தம் படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பும் , கெமிஸ்டிரியும் மிக அழகாக அமைந்து இருக்கும். பின் 2023 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்தார். இந்த படம் மக்களிடையெ எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை.

இந்நிலையில் அடுத்ததாக விஜய் தேவரகொண்டா ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தில் நடித்துள்ளார். மிருணாள் தாகூர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கீதா கோவிந்தத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டாவுடன், பரசுராம் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அப்படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 8 ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி எப்படி வெற்றி அடைந்ததோ அதே போல் மிருணாள் தாகுர் ஜோடியும் வெற்றி பெறும் என ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles