உலக சினிமாவில் முதல் முறை : இரு நாய்கள் மட்டுமே நடித்த படம்..!

இரண்டு நாய்கள் மட்டுமே நடித்த ஒரு முழு நீள திரைப்படத்தை கார்த்திகேயன் பிரதர்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் திப்பம்மாள் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு “கிளவர்” என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது.

தேவர் பிலிம்ஸ் படங்களிலும் இராமநாராயணன் இயக்கிய படங்களிலும் நடிகர்களுடன் பாம்பு, குரங்கு, நாய், மாடு முதலான விலங்குகள் நடித்து பல படங்கள் வந்துள்ளன. அதன் பிறகு விலங்குகளை வைத்து ஒரு சில படங்களே வந்துள்ளன. சிறிய இடை வெளிக்கு பிறகு கிளவர் என்ற படம் உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை இரண்டு நாய்கள் மட்டுமே நடித்துள்ளன. மதுரை மாவட்டத்தில் உள்ள டி.இராமநாதபுரம் கிராமத்தை சுற்றி உள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.

இந்தப் படத்திற்கு வாசு ஒளிப்பதிவையும் முத்துமுனியசாமி படத்தொகுப்பையும், ரகுநாத் இசையையும், தீபக்கார்த்திகேயன் மற்றும் சஞ்சய் கார்த்திகேயன் இருவரும் இணைத்தயாரிப்பையும் கவனித்துள்ளனர்.

இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ள செந்தில்குமார் சுப்ரமணியம் படத்தை பற்றி கூறுகையில், ” உலக திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக இரண்டு நாய்களை மட்டுமே நடிக்க வைத்து இந்தப் படத்தை இயக்கி உள்ளேன்.”

“அம்மா நாயிடமிருந்து குட்டி நாயை ஒரு சைக்கோ திருடி சென்று விடுகிறான். தனது குட்டியை மீட்க அம்மா நாய் எப்படி கண்டுபிடித்து மீட்டு வருகிறது என்பதை கதைக்களமாக்கி அதை விறுவிறுப்பான திரைக்கதையில் திகிலும், திரில்லும் கலந்து படத்தை இயக்கியுள்ளேன்.”

“புது முயற்சியாய் இந்த படத்தில் இரு நாய்களை தவிர வேறு யாரையும் நடிக்க வைக்கவில்லை. கமர்ஷியலாக படத்தை மக்கள் பார்த்து ரசிக்கும்படி என் முதல் படமான கிளவர் படத்தை இயக்கி உள்ளேன். இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது,” என்று தெரிவித்தார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles