முகேஷ் அம்பானி மகள் வீட்டை ரூ. 500 கோடிக்கு வாங்கிய பிரபல நடிகை, கணவர் நடிகர்..!

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் செல்ல மகள் இஷாவின் பங்களாவை ரூ. 500 கோடிக்கு வாங்கியிருக்கிறது ஒரு நட்சத்திர ஜோடி. அமெரிக்காவில் இருக்கும் அந்த பங்களா விற்பனை பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும், தொழில் அதிபர் ஆனந்த் பிராமலுக்கும் கடந்த 2018ம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் நடந்தது. 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி இரட்டை பிள்ளைகளை பெற்றெடுத்தார் இஷா. மகனுக்கு கிருஷ்ணா என்றும், மகளுக்கு ஆத்யா என்றும் பெயர் வைத்தார்.

இஷா கர்ப்பமாக இருந்தபோது அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தான் பெரும்பாலும் இருந்தார். அவருக்கு துணையாக அம்மா நீதா அம்பானி இருந்தார். இஷா கர்ப்ப காலத்தில் தங்கியிருந்த அந்த பங்களா 38 ஆயிரம் சதுர அடியில் அமைந்தது. அங்கு 12 படுக்கையறைகள், 24 பாத்ரூம்கள், ஜிம், ஸ்பா, பேட்மிண்டன் கோர்ட் என பல வசதிகள் உள்ளது.

அந்த பிரமாண்ட பங்களாவை பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லோபஸும், அவரின் காதல் கணவரான நடிகர் பென் அஃப்லெக்கும் தான் வாங்கியிருக்கிறார்கள். இஷா, ஆனந்த் பிராமல் அந்த பங்களாவை ரூ. 500 கோடிக்கு விற்பனை செய்திருக்கிறார்கள்.

முன்னதாக நீதா அம்பானியும் இரட்டையர்களான இஷா, ஆகாஷை அமெரிக்காவில் தான் பெற்றெடுத்தார். அவர்கள் குறை மாதத்தில் பிறந்தார்கள். மலைக்கு மேலே விமானத்தில் பயணம் செய்தபோது தான் தனக்கு இரட்டை பிள்ளைகள் பிறந்தது முகேஷ் அம்பானிக்கு தெரிய வந்ததாம். இதையடுத்தே மகளுக்கு இஷா என பெயர் வைத்தாராம். இஷா என்றால் மலைகளின் ராணி என அர்த்தம்.

இஷாவின் பிள்ளைகள் வளர்ந்து பிளே ஸ்கூலுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். முதல் நாள் இஷாவும், ஆனந்தும் சேர்ந்து வந்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள். அதன் பிறகு பிள்ளைகளை பள்ளியில் விட, அழைத்துச் செல்ல இஷா அம்பானி வருகிறார். அவர் பள்ளிக்கு வெளியே காத்திருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அவர் சாதாரண உடையில் பெற்றோருடன் பெற்றோராக காத்திருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அண்மையில் குஜராத்தில் நடந்த ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சென்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் தன் இரட்டை பிள்ளைகளின் முகத்தை வெளியுலகிற்கு காட்டினார் இஷா.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles