தைவானில் நிலநடுக்கம்.. அதிகரித்துவரும் பலி எண்ணிக்கை : சுனாமி எச்சரிக்கையை திரும்பப் பெற்ற ஜப்பான்..!

தைவானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைவானில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநாடுக்கத்தினால் தைவானின் அண்டை நாடுகளான ஜப்பான், பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா ஆகிய இடங்களிலும் இதன் தாக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

காலை 8 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சுமார் 12 முறை ஏற்றயிறக்கத்தை எதிர்கொண்டதாகவும் தைவான் வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கதினால் சுமார் 4 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும், 50 பேர் இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கபட்டதாகவும், 20 பேர் இடிந்து விழுந்த பகுதிகளில் சிக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தைவான் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநாடுக்கதினால் அண்டை நாடுகளான ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடபட்டு இருந்தது. சுமார் 10 அடி அலையுடன் சுனாமி ஏற்படலாம் என கூறபட்டு இருந்தது.

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, ஜப்பான் இந்த சுனாமி எச்சரிக்கையை திரும்பப்பெற்று இருக்கிறது. தைவானின் நிலநடுக்க சோகத்திற்கு இடையில் திரும்பப்பெறபட்ட ஜப்பானின் சுனாமி எச்சரிக்கை நிம்மதியை கொடுத்துள்ளது.

தைவானின் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் தைபே நகரின் மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய தைவான் நாட்டு ஜனாதிபதி Tsai Ing-wen, நிலநடுக்கம் ஏற்பட்டதும் தைவானின் கிழக்கு கடர்கறைச் சாலை மூட உத்தரவிட்டதாகவும் , மீட்புப்பணிக்காக ராணுவ அதிகாரிகளை அழைத்ததாகவும் கூறியுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles