பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்..!

வானியல் அற்புதங்களில் ஒன்றாக உள்ள வால் நட்சத்திரங்களை காண்பது அரிதான நிகழ்வாகும். இந்நிலையில் 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரக்கூடிய ’12 பி/பொன்ஸ்-புரூக்ஸ்'(12P/Pons-Brooks) என்ற வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருகிறது.

சுமார் 30 கிலோமீற்றர் நீள மையப் பகுதியை கொண்ட இந்த வால்நட்சத்திரம், தற்போதே தெரியத் தொடங்கிவிட்டதாகவும், தொலைநோக்கி உதவியுடன் இதனை பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு அடிவானத்தில் இந்த வால்நட்சத்திரம் தென்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த ’12 பி/பொன்ஸ்-புரூக்ஸ்'(12P/Pons-Brooks) வால்நட்சத்திரமானது 1385 ஆம் ஆண்டு சீனாவிலும், 1457 ஆம் ஆண்டு இத்தாலியிலும் தென்பட்டதாக குறிப்புகளுள்ளன.

இந்த ஆண்டு ஜூன் மாதம் இது பூமிக்கு மிக நெருக்கத்தில் வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் பிறகு இந்த வால்நட்சத்திரம் இனி 2095இல் தான் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles