புதிய இலங்கை சாதனை படைத்த ஹன்சானி..!

தாய்லாந்தில் நடைபெற்று வரும் உலக பளுதூக்கும் செம்பியன்ஷிப் போட்டியில் ஹன்சானி கோமஸ் புதிய இலங்கை சாதனையை நிகழ்த்தினார்.

உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது, இது ஒலிம்பிக் தகுதிப் போட்டியாகவும் அமைகிறது.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 49 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட ஹன்சானி கோமஸ், ஸ்னாட்ச் முறையில் 76 கிலோ எடையை தூக்கி புதிய இலங்கை சாதனையை நிகழ்த்தினார்.

இதேவேளை, 55 கிலோ எடைப் பிரிவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய திலங்க இசுரு குமார 5 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இவர் ஸ்னாட்ச் முறையில் 112 கிலோவும், கிளீன் அன்ட் ஜெர்க் முறையில் 145 கிலோவும் தூக்கினார். இதன் அடிப்படையில், திலங்க தூக்கிய மொத்த எடை 247 கிலோவாகும்.

இது அவரது தனிப்பட்ட சிறந்த பதிவாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles