அடுக்குமாடி குடியிருப்பில் வெடி விபத்து : 3 பேர் உயிரிழப்பு..!

பிரான்ஸ் தலைநகரான பரிஸ் அருகே லெவன்த் அரொன்சிண்ட்மெண்ட் பகுதியிலுள்ள 8 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 7ஆவது தளத்தில் இன்று(08) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

வெடிவிபத்தை தொடர்ந்து குடியிருப்பில் தீ பற்றிப் பரவியதில் 3 பேர் உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த அந்நாட்டு பொலிஸார், தீயணைப்பு மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமையல் எரிவாயு கசிவு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாமென முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles