Saturday, February 7, 2026
Homeஜார்ஜியா பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் மோதல்..!

ஜார்ஜியா பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் மோதல்..!

ஜார்ஜியா பாராளுமன்றத்தில் வெளிநாடு தொடர்பான மசோதா மீது நடந்த விவாதத்தின் மீது ஆளும், எதிர்கட்சி எம்.பி.க்கள் ஒருவரை ஒருவர் தாக்கி மோதிக்கொண்ட சம்பவம் நடந்தது.

ஜார்ஜியா பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் ஜார்ஜியன் டிரீம் கட்சி, வெளிநாடு தொடர்பாக சர்ச்சைக்குரிய மசோதாவை கொண்டு வந்தது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்று கொண்டிருந்தது.

மசோதா குறித்து ஆளும் கட்சி எம்.பி, ஒருவர் உரையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்கட்சி எம்.பி. அவரை பேச விடாமல் தடுத்ததுடன் அவரது முகத்தில் ‛பஞ்ச்’ விட்டார். இதனால் அவர் நிலைகுலைந்து கீழ விழுந்தார்.உடனே சக எம்.பி.க்கள் கைகலப்பில் ஈடுபட்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி்கொண்டனர். இதனால் பராளுமன்றம் ரணகளமானது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Most Popular