இருவேறு விபத்துக்களில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு..!

கொங்கிறீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலை விழுந்ததில் 8 வயதுச் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

வீட்டின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த கொங்கிறீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கியின் சிலையே குழந்தையின் உடலில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பொலன்னறுவை – அரலகங்வில ருஹுனுகம கிராமத்தில் உள்ள வீடொன்றில் பிளாஸ்டிக் தண்ணீர் தாங்கி ஒன்று தலையில் விழுந்ததில் மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹிருனி ரஷ்மிகா தேவ்மினி என்ற சிறுமியே இதில் உயிரிழந்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles