ஒடிசாவில் கோர விபத்தில் சிக்கிய சுற்றுலா பஸ் : 5 பேர் பலி..!

ஒடிசாவில் சுற்றுலா பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து விழுந்த விபத்தில் 5 பேர் பலியாயினர். ஒடிசாவின் கட்டாக் நகரிலிருந்து 50-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா பேருந்தில் மேற்குவங்க மாநிலம் திகஹா என்ற இடத்திற்கு செல்ல விருந்தனர்.

இவர்கள் சென்ற பஸ் நேற்று இரவு 10 மணியளவில் ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டம் பராபதி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாயினர். 38 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

நடந்த சம்பவம் குறித்து அறிந்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தலா ரூ. 3 லட்சம் நிதிவழங்கிட உத்தரவிட்டார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles